கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் செல்போன் டவர்கள் உள்ளன. இந்த செல்போன் டவர்களில் ஏராளமான குரங்குகள் இரவு நேரங்களில் தங்கி வருகின்றன. விடியும்போது குரங்குகள் அனைத்தும் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து செல்கின்றன. அப்போது பொதுமக்கள் அல்லது சிறுவர், சிறுமியர் யாரேனும் பை கொண்டு சென்றால், தின்பண்டங்களுக்காக வழிமடக்கி பிடுங்குகின்றன. பள்ளி மாணவ- மாணவிகள் மதிய உணவு கொண்டு வந்தால் அதையும் வழிமடக்கி பிடுங்கி தின்கின்றன. கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் குரங்குகளை பிடித்து காட்டில் விட வேண்டும்.
-தசரதன், கண்ணமங்கலம்.