குரங்குகள் தொல்லை

Update: 2022-09-01 09:41 GMT

வாலாஜா ரோடு ெரயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. டிக்கெட் எடுப்பதற்காக வந்து, கவுண்ட்டர் முன்பு நிறுத்தப்படும் மோட்டார்சைக்கிள்கள் மீது குரங்குகள் ஏறி அமர்ந்து மோட்டார்சைக்கிள்களின் சீட் கவர்களை கிழித்து நாசம் செய்கின்றன. மேலும் பயணிகள் கொண்டு செல்லும் பைகளில் உள்ள பழம் உள்ளிட்ட பொருட்களை தூக்கி செல்கின்றன. இதனால் பெண் பயணிகள், குழந்தைகள், நோயாளிகள் உள்ளிட்ட பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே குரங்குகள் தொல்லைகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.குணசேகரன், ராணிபேட்டை.

மேலும் செய்திகள்