வாலாஜாபேட்டை பஸ் நிலையம் பின்புறம் தேங்காய் கார ராமசாமி தெருவையொட்டினால் போல் நான்கு முனை சந்திப்பு சாலையின் ஓரம் வாலாஜா துணை தபால் அலுவலகம் பல வருடங்களாக உள்ளது. இங்கு தினமும் புதிய ஆதார் எடுத்தல், முகவரி மாற்றம் செய்தல், பெயர் திருத்தம் செய்தல், செல்போன் எண் சேர்த்தல் உள்பட பல சேவைகள் செய்யப்படுகின்றன. இந்த அலுவலக வளாக உள்புறம் மற்றும் வெளிப்புறம் வளாக பகுதிகளில் தரை பாசி படர்ந்துள்ளது. மேடும், பள்ளமுமாக உள்ளது. சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே, துணை தபால் அலுவலகத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தானம், வாலாஜா.