ராணிப்பேட்டை பாலாறு அருகே அரசு மதுபானக்கடை உள்ளது. அதன் அருேக காரியமேடை, அம்மன் கோவில் ஆகியவைகள் உள்ளன. அந்த மதுபானக் கடையில் மதுபானம் வாங்கியவர்கள் காரிய மேடைமேலே அமர்ந்தும், கோவில் அருகில் அமர்ந்தும் மதுபானம் குடிக்கின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், காரியம் செய்ய வரும் பொதுமக்களும் பாதிக்கின்றனர். மேலும் மதுபானம் குடிப்பவர்கள் அங்கேயே காலி மதுபாட்டில், பிளாஸ்டிக் கவர்கள் ஆகியவற்றை பாலாறு அருகிலேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழலும் பாதிக்கிறது. எனவே பாலாறு அருகில் உள்ள மதுபானக்கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜாபாதர், ராணிப்பேட்டை.