வாலாஜாபேட்டை-சோளிங்கர் ரோட்டில் படவேட்டம்மன் கோவில் எதிரில் சுடுகாடு பக்கத்தில் கரிக்கல் மலை உள்ளது. இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் பொழுதுப்போக்கு இடமாக 40 வருடங்களுக்கு முன்புவரை பயன்பாட்டில் இருந்தது. பின்னர் இந்த மலையே தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்துள்ளதால் கரிக்கல் மலையே காணாமல் போனது. இதை வாலாஜா நகராட்சியும் கண்டு கொள்ளவில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. உடனடியாக மலைையயும், மலைக்குப் போகும் வழியையும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர ஆக்கிரமிப்புகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருவேங்கடம், வாலாஜா.