பயணிகள் இருக்கை சரி செய்யப்படுமா?

Update: 2023-07-09 12:18 GMT

வேலூர்-ஆற்காடு சாலை தனியார் மருத்துவமனை நுழைவு வாயில் அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. அந்த நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்கு வசதியாக இரும்பு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு புறத்தில் உள்ள இருக்கைகள் உடைந்து கீழே விழுந்து கிடக்கின்றன. இதனால் அந்த நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்கு இருக்கை இல்லாமல் வெகு நேரம் நிற்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிழற்குடையில் உடைந்து கிடக்கும் இருக்கைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கந்தசாமி, வேலூர்.

மேலும் செய்திகள்