ஆற்காடு பகுதியில் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு முன்பாக இடிக்கப்படும் கழிவுகளை சாலையோரம் கொட்டுகிறார்கள். அந்தக் கட்டிட கழிவுகள் மாதக்கணக்கில் சாலையோரம் கிடக்கிறது. இதனால் சுற்றுச்சுழல் பாதிக்கப்படுகிறது. மக்களுக்குகு இடையூறாகப் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மேலும் வீடு கட்டும் நபர் சாலையோரம் செங்கற்கள், ஜல்லி, மணல் ஆகியவற்றை கொட்டி ைவத்துள்ளனர். இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சரவணன் ஆற்காடு