திருப்பத்தூரில் இணை சார் பதிவாளர் அலுவலகம்-1 மற்றும் இணை சார் பதிவாளர் அலுவலகம்-2 என செயல்பட்டு வருகிறது. அதில் இணை சார் பதிவாளர் அலுவலகம் 2-ல் பல மாதங்களாக சாப்ட்வேர் அப்டேட் செய்யாததால், அங்குப் பதிவு செய்யப்பட வேண்டிய பிழை திருத்த பத்திரங்கள் முறையாக பதிவு செய்ய முடியாமல் இருக்கின்றன. இதனால் திருப்பத்தூர் நகரம், கந்திலி ஒன்றியம், திருப்பத்தூர் ஒன்றியம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து இந்த அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் பிழை திருத்தல் பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ்பாபு, திருப்பத்தூர்.