வேலூர் பேரிபேட்டை காளியம்மன் கோவில் தெரு, பேரி பக்காளியம்மன் கோவில் தெரு சந்திப்பு பகுதியில் காளியம்மன் கோவில், சாந்தி குரு கோவில் மற்றும் ஜெயின் துறவிகள் தங்கும் மடம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான ஜெயின் துறவிகள் வருவார்கள். அவர்கள் காலணிகள் அணியாமல் நடப்பார்கள். இந்தப் பகுதியில் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியே வருகிறது. இதனை அவர்கள் கடந்து செல்வது கடினமாகிறது. நோய்பரவும் அபாயமும் உள்ளது. பொதுமக்களும் பலர் அந்த தெருவை மிகவும் சிரமத்துடன் கடக்கின்றனர். எனவே இங்கு கழிவுநீர் வெளியே வராதவாறு சுகாதார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகஸ்டின், வேலூர்.