வேலூர் புதிய பஸ்நிலையத்தில் பஸ்கள் வெளியே வரும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் மீண்டும் மீண்டும் உடைப்பு ஏற்படுகிறது. தற்போது அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கால்வாய் அடைப்பை நீக்கி தரமான மூடி அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.