கே.வி.குப்பம் போலீஸ் நிலையம் காட்பாடி-குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையோரம் பஸ் நிலையம், சந்தைமேடு இடையே உள்ளது. இதன் சுற்றுச்சுவர் ஓரம் அடிக்கடி மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடாக உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது உடைத்து எடுக்கப்பட்ட இரும்பு படிகட்டு ஓரமாக வீசப்பட்டுள்ளது. இங்கு தண்ணீர் தேங்காமல் வெளியேற வடிகால் அமைக்கவும், இப்பகுதியில் தேவையற்ற வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்கவும் அதிகாரிகள் முன் வர வேண்டும்.
-குணசேகர், கே.வி.குப்பம்.