ஏலகிரிமலையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வசித்து வருகின்றனர். இங்கு விளையாட்டு மைதானம் இல்லை. ஏலகிரிமலை இளைஞர்கள் எந்த ஒரு விளையாட்டுக்கும் பயிற்சி பெறுவதற்கு திருப்பத்தூர் அல்லது வாணியம்பாடிக்கு தான் செல்ல ேவண்டும். விளையாட்டு மைதானம் வேண்டி பலமுறை அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இளைஞர்களின் கோரிக்கையான விளையாட்டு மைதானம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிக்குமார், நிலாவூர்.