திருப்பத்தூர் அருகே உள்ள வெங்களாபுரம் கிராமம் திருப்பத்தூர் நகராட்சியில் இருந்தது. நில அளவையில் நகராட்சியில் இருந்து நீக்கப்பட்டு வெங்களாபுரம் கிராமத்தில் சேர்க்கப்பட்டது. வெங்களாபுரம் கிராமத்தில் உள்ள கடைசி கிராம நத்தம் எண்ணாக வழங்கி வேலூர் நில அளவையர் பதிவேடுகள்துறை மூலம் வீடு, வீடாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. நகராட்சியில் இருந்து நீக்கி பல ஆண்டுகளாகியும் இதுவரை பட்டா வழங்கவில்லை. இதனால் அப்பகுதியில் பத்திரம் செய்யவோ, கடன் பெறவோ, மின்இணைப்பு பெறவோ முடியவில்லை. பல ஆண்டுகளாக போராடும் எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், வெங்களாபுரம் கிராமம்.