போதிய இடவசதி இல்லாத அரசு பள்ளி

Update: 2024-07-28 19:55 GMT

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி 75 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் விளையாட்டு மைதானம், இறை வணக்கம் செய்ய போதிய இட வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இதுகுறித்து சட்டமன்ற ஆய்வுக்குழுவுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ரங்காபுரம் பகுதியில் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். அதை அகற்றி மாவட்ட கல்வி அதிகாரி பெயரில் பட்டா வழங்க வேண்டும். தொடர்ந்து அந்த இடத்தில் ஆண்களுக்கு மேல்நிலைப்பள்ளி அமைக்கவும், தற்போது உள்ள பள்ளி பெண்கள் பள்ளியாகவும் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஈஸ்வரன், பெற்றோர்-ஆசிரியர் கழக பொருளாளர், வேலூர்.

மேலும் செய்திகள்