ஜவ்வாதுமலைப்பகுதியில் ஆட்டியானூர் கிராமம் உள்ளது. அங்கு ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். மக்கள் மருத்துவமனைக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜமுனாமரத்தூருக்கு தான் செல்ல வேண்டும். ஆகையால் ஆட்டியானூரில் அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜி.சக்கரவர்த்தி, ஆட்டியானூர்.