காட்பாடி பகுதியைச் சுற்றி உள்ள கல்புதூர், ராஜீவ்காந்திநகர், கிறிஸ்டியான்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இரவில் வந்து வீட்டின் கேட்டை தாண்டி உள்ள வருவதும், கதவை திறப்பதும், பூட்டை உடைப்பதுமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது திருட வருபவரா? எனச் சந்தேகம் எழுந்துள்ளது. போலீசாரும், காவல் துறையினரும் இணைந்து காட்பாடி மற்றும் வேலூரில் மனநலம் பாதித்து சுற்றித்திரிபவர்களை பிடித்து காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வார்களா?
-பி.துரை, கல்புதூர்.