வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காயிதே மில்லத் கூட்ட அரங்கம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும். அப்போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதைத் தடுக்கும் வகையில் அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்தக் கேமரா பழுதாகி வெகு நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கேசவன், வேலூர்.