கண்ணமங்கலம் பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான வாகனங்கள் கரும்புகையை வெளியேற்றிய படி செல்கின்றன. போதிய பராமரிப்பின்றி வாகனங்கள் இயக்கப்படுவதால், கரும்புகை வெளியேறி சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. காற்று மாசை தடுக்கவும், சுற்றுச்சூழல் மாசை தடுக்கவும் கரும்புகை வெளியேறும் வாகனங்கள் மீது மாசு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயசீலன், கண்ணமங்கலம்.