ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2022-09-14 13:45 GMT

வாலாஜாபேட்டை எம்.பி.டி. ரோட்டில் உள்ள வாலாஜா அரசு மருத்துவமனை முதல் அரசு கலை கல்லூரி வரை பல இடங்களில் தனியார் ஆக்கிரமித்துக் கடை வைத்துள்ளனர். பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்வதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் 2 வருடங்களாக இந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. இதுசம்பந்தமாக தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறையும், போலீசாரும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் வர ேவண்டும்.

-நம்பிராஜன், வாலாஜா.

மேலும் செய்திகள்