மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு

Update: 2023-06-21 13:14 GMT

அன்வர்திகான்பேட்டை பஜார் வீதியில் இருந்து இருபுறமும் மழைக்காலங்களில் மழைநீர் வடிய கால்வாய் கட்டப்பட்டது. சில மாதங்களுக்கு முன் ரெயில் நிலையம் அருகே கால்வாய் வழியாக வரும் மழைநீர் வெளியேற கீழ்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது கீழ்பாலத்தில் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்து கடை கட்டப்பட்டு வருகிறது. இதனால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் பாலத்திலேயே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற முன் வர வேண்டும்.

-பொதுமக்கள், அன்வர்திகான்பேட்டை. 

மேலும் செய்திகள்