கலசபாக்கம் ஒன்றியம் பூண்டி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சொந்தமான பள்ளி கட்டிடத்தில் கலசபாக்கம் வட்டார தொடக்கப்பள்ளி கல்வி அலுவலக கிடங்காக செயல்படுகிறது. எங்கள் ஊரில் உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிக்கு இட பற்றாக்குறை உள்ளது. அரசு உத்தரவால் ஏற்கனவே இருந்த பழுதடைந்த தொடக்கப்பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டனர். தற்போது 2 பள்ளிக்குமே இடம் பற்றாக்குறையாக உள்ள நிலையில் தொடக்கப்பள்ளி கல்வி குடோனாக செயல்படுவது வேதனையாக உள்ளது. எனவே கல்வி குடோனை அரசு வேறு இடத்துக்கு மாற்றி மீண்டும் எங்கள் ஊருக்கு பள்ளியாக செயல்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-சிவசங்கரன், பூண்டி கிராமம்.