வேலூர் புதிய பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்த சில நாட்களிலேயே போதை ஆசாமிகள் மதுபானத்தை குடித்து விட்டு ஓய்வெடுக்கும் இடமாக மாற்றி விட்டனர். சென்னை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே மதுபானம் குடித்து விட்டு ஏராளமான காலி பாட்டில்களை வீசி உள்ளனர். எனவே புதிய பஸ் நிலையத்தில் போதை ஆசாமிகள் செய்யும் அட்டகாசத்தை போலீசார் தடுக்க வேண்டும்.
-மோகன்ராஜ், வேலூர்.