கலசபாக்கம் தாலுகா விண்ணுவாம்பட்டு கிராமத்தில் கால்நடை மருத்துவமனை உள்ளது. அதன் முன் பகுதியில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. பின் பக்கம் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. தேங்கிய தண்ணீரை வடிய வைக்க கால்வாய் வசதி இல்லை. கால்நடை மருத்துவமனை வளாகத்தில் வடிகால்வாய் வசதி அமைத்துத்தருவார்களா?
-பொதுமக்கள், விண்ணுவாம்பட்டு.