அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட சயனபுரம் பாடசாலை தெருவில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி நுழைவுவாயில் பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி அங்குள்ள மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் டெங்கு வரும் அபாயம் உள்ளது. தேங்கி கிடக்கும் மழைநீரால் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்குள் செல்ல இடையூறாக உள்ளது. தேங்கி கிடக்கும் மழைநீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ப.மு.ராதாகிருஷ்ணன், சயனபுரம்.