வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பாலாறு பாலத்தின் கீழே பொதுமக்கள் ஏராளமான குப்பைகளை கொட்டி வருகின்றனர். அந்தக் குப்பைகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்து சென்று விடுகின்றனர். அதில் இருந்து வரும் நச்சுப்புகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகளுக்கு தீ வைப்பதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.