எங்களது தெரு வேலூர் மாநகராட்சியில் முதல் வார்டில் கல்புதூர் ராஜீவ்காந்தி நகர் 3-வது மெயின் தெருவில் உள்ளது. இந்தப் பகுதியில் 2-வது தெருவில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் உள்ளது. இந்தப் பகுதியில் சிலர் டிராக்டர் போன்ற வாகனங்களில் ஏராளமான நாய்களை கொண்டு வந்து விட்டுச் செல்கின்றனர். இதனால் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் அவை, குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. இரவு முழுவதும் நாய்கள் குரைக்கும் சத்தமாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பி.துரை, கல்புதூர்.