ஆரணி ஒருங்கிணைந்த வி.ஏ.கே. நகர் பகுதியில் இரவு, பகலில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சிறுவர்கள், சிறுமிகள், முதியவர்கள், பெண்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும்.
-விக்னேஷ், ஆரணி.