ஆற்காடு நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட மனை பிரிவுகளில் வீடுகள் கட்டி வசிக்கும் இடங்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் நடந்து, மோட்டார்சைக்கிள்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி வருகின்றன. ஒரு சில நேரத்தில் கடித்தும் விடுகின்றன. மழைக்காலம் என்பதால் அவ்வாறு நாய் கடித்தால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடும். நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆதிமூலம், ஆற்காடு.