காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. வாகனங்களில் செல்வோர், பள்ளிக்குச் செல்லும் சிறுவர், சிறுமிகள் ஆகியோரை நாய்கள் குரைத்தபடி விரட்டுகின்றன. இரவில் நாய்கள் கூட்டமாக கூடி சண்டையிடுவதால் ஏற்படும் சத்தம் காரணமாக மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேரூராட்சியில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிசுந்தரம், காவேரிப்பாக்கம்.