நாய்கள் தொல்லை

Update: 2023-04-12 11:18 GMT

கலவையில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. பெரும்பாலும் கலவை-நல்லூர் செல்லும் சாலை, தாலுகா அலுவலகத்துக்கு செல்லும் சாலையில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. ஒருசில நேரத்தில் நாய்கள் அங்குள்ள வயல்களுக்கு சென்று மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகள், கன்று குட்டிகளை விரட்டி கடிக்க பாய்கின்றன. இரவில் மோட்டார்சைக்கிள்களில் செல்வோரை விரட்டுகின்றன. பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமிகளை நாய்கள் கடிக்க பாய்கின்றன. எனவே பேரூராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

-அன்பு, வாழைப்பந்தல் சாலை, கலவை.

மேலும் செய்திகள்