நாய்கள் தொல்லை

Update: 2022-12-04 11:25 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராம மெயின் ரோட்டில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. ரோடு ஓரம் உள்ள ஆடு, கோழி இறைச்சி கடைகளில் இருந்து தூக்கி வீசப்படும் எலும்புத்துண்டுகள், கறி, கொழுப்புக்கழிவுகளை சாப்பிடுவதற்காக அந்தக் கடைகள் முன்பு நாய்கள் கும்பலாக கூடுகின்றன. அவ்வாறு கூடும் நாய்கள் சண்டையிட்டுக் கொண்டு ஓடும்போது வாகனங்களல் அடிபடுகின்றன. நாய்கள் தொல்லையால் விபத்துகளும் ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும் வியாபாரிகள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

-சதாம், தூசி.

மேலும் செய்திகள்