அரக்கோணம் நாகாலம்மன் நகரில் இருந்து வாணியம்பேட்டை செல்லும் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இரவில் சாலையில் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. நாய்கள் சண்டையிட்டுக் கொண்டு சாலையின் குறுக்கே ஓடுகின்றன. அந்த நேரத்தில் மோட்டார்சைக்கிள்கள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. நாய்களை பிடித்துச் செல்ல நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குணசீலன், அரக்கோணம்.