பாணாவரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. குடியிருப்புகள், சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகிறது. சாலையில் வாகனங்கள் செல்லும்போது குறுக்ேக ஓடி விபத்தை ஏற்படுத்துகிறது. சாலை ஓரங்களில் உள்ள இறைச்சி, சிக்கன் பக்கோடா கடைகளில் தூக்கி எறியப்படும் எலும்பு துண்டுகளை தின்பதற்காக நாய்கள் சண்டையிடுகின்றன. அப்போது அருகில் நிற்போரை கடித்து விடுகின்றன. நாய்களை பிடிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், நெமிலி.