ஆற்காடு பகுதியில் பெரும்பாலான தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தெருக்களில் நடந்து செல்லும்போது அவர்களை துரத்தி செல்கின்றன. ஒரு சில இடங்களில் மாணவர்களை நாய் கடித்து விடுகிறது. இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை உடனடியாக பிடித்து காட்டுப் பகுதிகளில் விட்டால் நன்றாக இருக்கும்.
-சுந்தரம், தன்னார்வலர், ஆற்காடு.