ஆற்காடு நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாலை மற்றும் இரவில் டியூசன் செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலை முடிந்து வரும் பெண்களை தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் கடிக்க வருகின்றன. ஆற்காடு பகுதியில் நாய் தொல்லை அதிகமாக உள்ளது. ஒரு சில இடங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை நாய்கள் கடித்து விடுகின்றன. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகம், ஆற்காடு