காட்பாடி ரெயில் நிலையம் பயணிகள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில் நிலையம் ஆகும். இங்கு பயணிகள் செல்வதற்காக நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நகரும் படிக்கட்டுகள் கடந்த சில மாதங்களாக பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் நடைமேடையை கடக்க சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பயன்பாடற்ற நிலையில் கிடக்கும் நகரும் படிக்கட்டுகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திருவிக்ரராமன், காட்பாடி.