ஆற்காட்டில் பாலாற்றங்கரையோரம் பிணங்களை எரிக்க மின்சார எரி மேடை கட்டப்பட்டது. இவை கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. ஆனால் இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் பிணங்களை திறந்த வெளியிலேயே எரிகின்றனர். பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட எரிமேடை பயன்பாட்டுக்கு கொண்டு வராமலேயே பாழாகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பொன்னுசாமி, ஆற்காடு.