கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குடியிருப்பு வளாகம் பொதுப்பணித்துறையால் 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இந்தக் குடியிருப்பை சுற்றிலும் புதர் வளர்ந்து காணப்படுகிறது. பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குடியிருப்பை திறந்து சீரமைத்து, பயன்பாட்டுக்கு விட வேண்டும்.
-அய்யப்பன், கடலாடி.