வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அங்கு அதிகமான கடைகள் உள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்லவே சிரமமாக இருக்கிறது. இதுபோக நடைபாதையில் கடைக்காரர்கள் ஒரு சிலர் மோட்டார்சைக்கிளை நிறுத்துகின்றனர். இதனால் மீன் வாங்க வரும் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வழியில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலன், வேலூர்.