வேலூர் புதிய பஸ் நிலையத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. அவற்றில் ஒரு சில கடைகளில் பயணிகள் நடந்து செல்வதற்கு இடையூறாக பொருட்களை வழியில் வைத்துள்ளனர். கடை முன்பு மஞ்சள் நிற கோடு அமைத்து இதற்குள் பொருட்கள் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதையும் மீறி அவர்கள் வெளியே வைக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மாதவன், வேலூர்.