வேலூரில் பல்வேறு முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மாடுகள் சுற்றித்திரிகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறும் சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சாலையின் குறுக்கே மாடுகள் செல்வதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலன், வேலூர்.