பழுதான பள்ளி கட்டிடம்

Update: 2022-11-16 13:46 GMT

வேலூர் மாவட்டம் பெருமுகையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் கட்டிடம் ஊறி போய் உள்ளது. இதனால் மழைநீர் கசிவும் உள்ளது. மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியை புனரமைத்துத்தரும் படி கேட்டுக்கொள்கிறோம்.

-பொதுமக்கள், பெருமுகை. 

மேலும் செய்திகள்