வாலாஜா நகரில் பஸ் நிலையம் எதிரில் பழைய வட்டாட்சியர் அலுவலகம் பாழடைந்துள்ளது. இந்த வளாகத்தில் இருந்த பல அரசு அலுவலகங்கள் வாலாஜா அரசு மருத்துவமனை எதிரில் மாற்றப்பட்டு விட்டன. தற்போது சார்நிலை கருவூலம், கூட்டுறவு சுய சேவை பிரிவு கடை, ஆதி திராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகம் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. பல்வேறு வாகனங்கள் ஏலம் விடப்படாமல் பழுதடைந்து குவிக்கப்பட்டுள்ளன. சட்ட விரோத செயல்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், வாலாஜா.