பாழடைந்த அரசு கட்டிடங்கள்

Update: 2022-10-01 17:53 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கு செல்லும் வழியில் குடியிருப்புகளின் நடுவே உபயோகத்தில் இல்லாத அரசுக்கு சொந்தமான பழைய அரசு பள்ளி கட்டிடமும், கட்டி முடிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமலே பாழாய் போன அரசு சமுதாயக் கூட கட்டிடமும் உள்ளது. இந்தப் பழைய கட்டிடங்களில் தற்போது சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. அந்தக் கட்டிடங்களை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். இல்லையேல், கட்டிடங்களை இடித்து விட்டு வேறொரு பயன்பாட்டுக்கு அந்த இடத்தை பயன்படுத்த வேண்டும்.

-தமிழ்வாணன், பாணாவரம்.

மேலும் செய்திகள்