வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் வள்ளலார் நகர் அருகே மிகப்பெரிய புளியமரம் ஒன்று பட்டுப்போன நிலையில் உள்ளது. அந்தச் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்வதால், எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆபத்து நடக்கும் முன் பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும்.
-கபிலேஸ்வரன், திருப்பத்தூர்.