வேலூர் காங்கேயநல்லூர் ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர், பெரிய ஏணியை கழுத்தில் மாட்டி தோளில் சுமந்தபடி பின் இருக்கையில் இரு பெண்களை அமர வைத்துக் கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்தார். சற்று கவன குறைவு ஏற்பட்டாலும், பெரும் ஆபத்து நிகழக்கூடும். இதுபோல் ஆபத்தான பயணம் செய்வோருக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்ப வேண்டும்.
-தண்டபாணி, காங்ேகயநல்லூர், வேலூர்.