வாலாஜாவில் சோளிங்கர் ரோடு முடிவிலும் வாலாஜா நகரின் தொடக்கத்திலும் 4 வழி சாலை சந்திப்பு உள்ளன. இந்த சந்திப்புகளின் முன்பு திருமணம், இறப்பு, வியாபாரம், கல்வி சம்பந்தப்பட்ட விளம்பர பேனர்கள் பெரிய அளவில் வைக்கப்படுகின்றன. பேனர்கள் மறைப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி தேசிய நெடுஞ்சாலைகளின் வளைவில் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே இதுபோன்ற இடங்களில் பேனர்கள் வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குழந்தைவேல், வாலாஜா.