சோளிங்கர்-அரக்கோணம் சாலையில் உள்ள சண்முகபுரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள்நிழற்கூடம் உள்ளது. அந்த நிழற்கூடம் சேதம் அடைந்துள்ளது. சுவர்கள் உடைந்தும், மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்தும் உள்ளது. பயணிகள் நிழற்கூடம் எந்த நேரத்திலும் சரிந்து விழலாம். அந்தப் பயணிகள் நிழற்கூடத்தை அகற்றி விட்டு புதிதாக கட்டிடத்தர வேண்டும்.
பரசுராமன், சண்முகபுரம்