திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது கல்லேரி கிராமம். இங்கு ஏரிக்கரை அருகே தானியங்களை காய வைக்க உலர்களம் உள்ளது. இந்தக் களத்தை சரியான முறையில் பராமரிக்காததால் சுற்றிலும் சுவர்கள் உடைந்து மழைப் பெய்தால் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உலர் களத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.
-சிவா, கல்லேரி.