வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இந்தியன் வங்கி அருகில் நடைபாதையின் ஓரமுள்ள கால்வாயின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த இரும்புப்பலகை மீது 5 வருடங்களுக்கு முன்பு கனரக வாகனம் மேலே ஏறிச் சென்றதில் இரும்புப்பலகை உடைந்தது. அந்த இரும்புப்பலகையை இதுவரை மாற்றவில்லை. இதனால், அந்த வழியாக செல்பவர்கள் தடுமாற்றம் அடைகின்றனர். ஆகவே உடனடியாக உறுதியான இரும்புப்பலகை போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிங்காரம், வாலாஜா.